Thursday, April 19, 2018
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு : தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1-1-2016 முன் தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கடந்த 1-10-2017 அன்று அரசு அறிவித்தது.
ஆனாலும், 21 மாத நிலுவைத்தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், ஏற்கனவே உள்ள ஊதிய முரண்பாடுகளை களையாமல், மீண்டும் அதே குறைபாடுகளுடன் 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து தற்போது, அந்த ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊதிய முரண்பாடுகளை களைய எம்.ஏ.சித்திக் (ஐஏஎஸ்) அரசு செயலாளர் (செலவினம்), நிதித்துறை தலைமையில் ஒரு நபர் குழுவினை அமைத்துள்ளது. ஊதிய முரண்பாடு மற்றும் ஊதிய மாற்றம் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஒரு நபர் குழு திட்டமிட்டுள்ளது.
மனுதாரர்கள் மற்றும் அரசு பணியாளர் சங்கங்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிக்கைகளை ஒரு நபர் குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் முகவரி omc_2018@tn.gov.in அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும், நாளையுடன் பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன.
முக்கிய தேர்வுகளான, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டன.பத்தாம் வகுப்புக்கு, நாளை சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. இத்துடன், 10ம் வகுப்புக்கு, அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.
தமிழகத்தில், தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையில், தேர்வுகள் ஏற்கனவே, முடிந்துவிட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுகள், நாளையுடன் முடிவுக்கு வருகின்றன. எனவே, நாளையுடன், மாணவர்களுக்கான பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன.
நாளை மறுநாள் முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. மே, 31 வரை விடுமுறை நீடிக்கும். மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அதே நேரம், ஆசிரியர்களுக்கு, ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும். அவர்களுக்கு, 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Monday, April 16, 2018
JACTTO - GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்:
ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் (14.04.2018) சனிக்கிழமை சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
நேற்று (14.04.18) மாலை 3.30 மணி அளவில் ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை, திருவல்லிக்கேணி,
அரசு ஊழியர்கள் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம் இல்லை?
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய லைட்பிரவுன்' மற்றும் மெரூன் நிற சீருடையில் மாற்றம் இல்லை; மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாற்றப்பட்ட சீருடை விபரம் சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன்,'நடப்பு கல்வியாண்டு (2017--18) பயன்படுத்த வேண்டிய சீருடை குறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்தில் பேண்ட், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட சட்டை, சட்டை மேல் மாணவியருக்கு சாம்பல் நிறத்தில் ஒரு கோட் சீருடையாக அணிய வேண்டும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கருநீல நிறத்தில் கோடிட்ட மேல்சட்டை, மாணவியர் கருநீல கோட்டு சீருடையாக அணிய வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் போட்டோவுடன் சி.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்துள்ளது.
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.
அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு!!
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Friday, April 13, 2018
DA Arrear Software 2018 @ MSKedusoft
MSK FREE EDUSOFT
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
DA Arrear Software 2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
DA Arrear Software 2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
--
Always Be Happy..!
Thank You..
Wednesday, April 4, 2018
👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫 2049 பங்குனி 21 ♝ 04•04•2018
🔥 T N P T F 🔥
🛡 மேலூர் 🛡
👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫
2049 பங்குனி 21 ♝ 04•04•2018
🔥
🛡அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு.
🔥
🛡CBSE 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது - மத்திய அரசு அறிவிப்பு.
🔥
🛡மூன்றாம் பருவ தேர்வுக்கால அட்டவணை கரூர், சேலம் & திருவண்ணாமலை DEEOs வெளியீடு. பள்ளிக்கல்வி காலண்டர் அடிப்படையில் 9,11,13,16,18,19 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.
🔥
🛡பள்ளி திறந்ததும், மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ஒன்று, ஆறு,ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் நாளே, அந்த புத்தகங்கள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி அமைச்சர் பேச்சு
🔥
🛡தஞ்சாவூர் மாவட்டம் ஊரகப் பகுதியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் அனைவரையும் இணைத்து ஒரே வித சீருடையோடு மகளிர் தினவிழா கொண்டாடி அசத்தினார் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ரமாபிரபா.
🔥
🛡
தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவளித்த ஆசிரியருக்கு ஊதிய பலன்கள் கட் - நீலகிரி CEO அதிரடி உத்தரவு.
🔥
🛡பணிமாறுதலில் Spouse முன்னுரிமை பயன்பாட்டில் சில மாற்றம் வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு - பரிசீலனை செய்ய இயக்குனருக்கு அரசு பரிந்துரை
🔥
🛡அரசுப்பள்ளி மாணவர் நிலை மோசம் - அரசும் ஆசிரியரும் பாடுபடும் போது பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை விவரிப்பு.
🔥
🛡ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து Whatsapp தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
🔥
🛡 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மே 19மற்றும் 20ஆம் தேதி TANCET நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. ஆன்லைனில் ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப்www.annauniv.edu/tancet2018 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
🔥
🛡காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
🔥
🛡அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்கள் நடித்து, ஆசிரியர்கள் இயக்கிய "வெளிச்சம்" குறும்படம் வெளியீடு
Subscribe to:
Posts (Atom)