Wednesday, April 4, 2018

👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫 2049 பங்குனி 21 ♝ 04•04•2018

🔥  T  N  P  T  F  🔥
🛡  மேலூர்  🛡


👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2049 பங்குனி 21 ♝ 04•04•2018

🔥
🛡அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு.

🔥
🛡CBSE 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது -  மத்திய அரசு அறிவிப்பு.

🔥
🛡மூன்றாம் பருவ தேர்வுக்கால அட்டவணை கரூர், சேலம் & திருவண்ணாமலை DEEOs வெளியீடு. பள்ளிக்கல்வி காலண்டர்  அடிப்படையில் 9,11,13,16,18,19 ஆகிய தேதிகளில்  தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.

🔥
🛡பள்ளி திறந்ததும், மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ஒன்று, ஆறு,ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் நாளே, அந்த புத்தகங்கள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி அமைச்சர் பேச்சு

🔥
🛡தஞ்சாவூர் மாவட்டம் ஊரகப் பகுதியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் அனைவரையும் இணைத்து ஒரே வித சீருடையோடு மகளிர் தினவிழா கொண்டாடி அசத்தினார் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ரமாபிரபா.

🔥
🛡
தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவளித்த ஆசிரியருக்கு ஊதிய பலன்கள் கட் - நீலகிரி CEO அதிரடி உத்தரவு.

🔥
🛡பணிமாறுதலில் Spouse முன்னுரிமை பயன்பாட்டில் சில மாற்றம் வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு - பரிசீலனை செய்ய இயக்குனருக்கு அரசு பரிந்துரை

🔥
🛡அரசுப்பள்ளி மாணவர் நிலை மோசம் - அரசும் ஆசிரியரும் பாடுபடும் போது  பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை விவரிப்பு.

🔥
🛡ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து Whatsapp தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

🔥
🛡 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மே 19மற்றும் 20ஆம் தேதி TANCET நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. ஆன்லைனில்  ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப்www.annauniv.edu/tancet2018 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

🔥
🛡காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் -  தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

🔥
🛡அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்கள் நடித்து, ஆசிரியர்கள் இயக்கிய "வெளிச்சம்" குறும்படம் வெளியீடு

No comments: