*NHIS ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றுமொரு மகத்தான சாதனை*
*உடுமலைப்பேட்டை TNPTFன் வட்டார துணை செயலாளர் திருமதி ஹேனா ஷெர்லி அவர்களுக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது*
*NHIS மூலம் முதல் தவணையாக ரூபாய் 29000 வழங்கப்பட்டது*
*அதற்கு மொத்த செலவாக ரூபாய் 174000 என பில் வழங்கப்பட்டது*.
*உடனே திருப்பூர் மாவட்ட செயலாளர் கனகராஜா அவர்கள் மூலம் மாநில மையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.*
*நமது சங்க விருதுநகர் மாவட்டச் செயலாளர் NHIS ஒருங்கிணைப்பாளர்தோழர் செல்வகணேஷ் அவர்கள் முயற்சியினால் 103000 வழங்கினார்கள்*
*இதுவும் குறைந்த தொகையாக உள்ளதால் தோழர் செல்வகணேஷ் அவர்கள் மீண்டும் முயற்சி செய்து அறுவை சிகிச்சைக்கு இறுதித் தொகையாக 154780பெற்றுத் தந்தார்கள்.*
*இது மொத்த தொகையில் 89% ஆகும்.*
*அறுவை சிகிச்சைக்கான தொகையில் பெரும் தொகையை பெற்றுத் தர உதவிய திருப்பூர் மாவட்ட TNPTF பொறுப்பாளர்களுக்கும் மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் விருதுநகர் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வகணேஷ் அவர்களுக்கும் உடுமலை வட்டார கிளையின் சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம்*
*இராமகிருஷ்ணன் செயலாளர் TNPTF உடுமலை*
No comments:
Post a Comment