Sunday, December 23, 2018

வருமானவரிப் படிவம் 2018-2019 / income Tax Form 2018-2019

வருமானவரிப் படிவமானது அனைவரும் பயன்படு
த்தும் வகையில் மிக மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.

குறைகள் இருப்பின் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்..


                     INCOME TAX FORM Download       
                 
 Model income Tax Form Download



MELUR BLOCK
MADURAI DISTRICT

Tuesday, December 18, 2018

NHIS-TNPTFன் சாதனை

*NHIS ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றுமொரு மகத்தான சாதனை*

*உடுமலைப்பேட்டை TNPTFன் வட்டார துணை செயலாளர் திருமதி ஹேனா ஷெர்லி அவர்களுக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது*

Sunday, November 4, 2018

Society Loan Calculator

1) ENTRY பக்கத்தில் தேவைப்படும் விவரங்களை பதிவு செய்யவும்.
2) STATEMENT பக்கத்தில் மஞ்சள் வண்ணக் கட்டத்தில் LOAN எண்ணை பதிவு செய்யவும்.
3) SOCIETY பெயரை STATEMENT பக்கத்தில் தலைப்பில் பதிவு செய்யவும்

(1364 நபர்களுக்கு உபயோகப்படும் - A4 தாளில் பிரதி எடுத்துக் கொள்ளலாம்)

Society Loan Calculator Download

Thursday, July 19, 2018

சாதனை வெற்றி!!

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த திருமதி. கவிதா ஆசிரியர் அவர்களுக்கு மதுரை வடமலையான் மருத்துவமனையில் Hernia அறுவை  சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.83000/- கோரியது இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.32000/- மட்டுமே அனுமதித்தது. முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில்  ( 17.7.2018) NHIS - மூலம் தொகை ரூ.77,000/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
இது TNPTFன் மகத்தான சாதனை || 
-🌹🌹🌹🌹🌹🌹🌹

TNPTF ன் NHISல் சாதனை

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
கடலூர்  மாவட்டத்தைச் சார்ந்த திருமதி. ரெக்ஷோனா ஆசிரியர் அவர்களுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்ட  சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.330000/- கோரியது இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.83000/- மட்டுமே அனுமதித்தது. உடனடியாக கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில் இன்று ( 18.7.2018) NHIS - மூலம் தொகை ரூ.3,05,688/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
இது TNPTFன் மகத்தான சாதனை || 
-🌹🌹🌹🌹🌹🌹🌹

Saturday, July 14, 2018

ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா? இல்லையா? பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர் ஆசிரியர்களிடையே குழப்பம்

வரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் பெற்றோரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி விழாவாகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

Friday, May 25, 2018

Income Tax Calculation Software FY 2018-2019 @ MSKedusoft

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
  MSK FREE EDUSOFT
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*Macro Enabled Excel Software [Only for Computer Use]*

Click Here to Download 👇👇👇👇

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


*Without Macro Excel Software [Computer or Android Mobile Use]*

Click Here to Download 👇👇👇👇
https://drive.google.com/open?id=1wwjfrsw8dpWX9OsWKHanbqWc6GZ2X5Qw

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

--
Always Be Happy..!
Thank You..

Thursday, April 19, 2018

அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும்

"கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்"


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு : தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 1-1-2016 முன் தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கடந்த 1-10-2017 அன்று அரசு அறிவித்தது. 

ஆனாலும், 21 மாத நிலுவைத்தொகை வழங்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், ஏற்கனவே உள்ள ஊதிய முரண்பாடுகளை களையாமல், மீண்டும் அதே குறைபாடுகளுடன் 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து தற்போது, அந்த ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊதிய முரண்பாடுகளை களைய எம்.ஏ.சித்திக் (ஐஏஎஸ்) அரசு செயலாளர் (செலவினம்), நிதித்துறை தலைமையில் ஒரு நபர் குழுவினை அமைத்துள்ளது. ஊதிய முரண்பாடு மற்றும் ஊதிய மாற்றம் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஒரு நபர் குழு திட்டமிட்டுள்ளது.  


மனுதாரர்கள் மற்றும் அரசு பணியாளர் சங்கங்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோரிக்கைகளை ஒரு நபர் குழுவிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் முகவரி omc_2018@tn.gov.in அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும், நாளையுடன் பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி இறுதி தேர்வுகள் நடந்து வருகின்றன. 

முக்கிய தேர்வுகளான, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டன.பத்தாம் வகுப்புக்கு, நாளை சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. இத்துடன், 10ம் வகுப்புக்கு, அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.

தமிழகத்தில், தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையில், தேர்வுகள் ஏற்கனவே, முடிந்துவிட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே, தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுகள், நாளையுடன் முடிவுக்கு வருகின்றன. எனவே, நாளையுடன், மாணவர்களுக்கான பள்ளி வேலை நாட்கள் முடிவடைகின்றன. 


நாளை மறுநாள் முதல், கோடை விடுமுறை துவங்குகிறது. மே, 31 வரை விடுமுறை நீடிக்கும். மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அதே நேரம், ஆசிரியர்களுக்கு, ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும். அவர்களுக்கு, 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, April 16, 2018

JACTTO - GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்:

ஜேக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்  (14.04.2018) சனிக்கிழமை சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.


நேற்று (14.04.18)  மாலை 3.30 மணி அளவில்  ஜேக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை, திருவல்லிக்கேணி,


அரசு ஊழியர்கள் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:



1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம் இல்லை?

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய லைட்பிரவுன்' மற்றும் மெரூன் நிற சீருடையில் மாற்றம் இல்லை; மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாற்றப்பட்ட சீருடை விபரம் சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன்,'நடப்பு கல்வியாண்டு (2017--18) பயன்படுத்த வேண்டிய சீருடை குறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்தில் பேண்ட், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட சட்டை, சட்டை மேல் மாணவியருக்கு சாம்பல் நிறத்தில் ஒரு கோட் சீருடையாக அணிய வேண்டும்.


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கருநீல நிறத்தில் கோடிட்ட மேல்சட்டை, மாணவியர் கருநீல கோட்டு சீருடையாக அணிய வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் போட்டோவுடன் சி.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்துள்ளது.

பாட புத்தங்கள் 20% விலை உயர்வு!


தனி ஒருவன் : மூடு விழா காணும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்!

சில வருடங்களுக்கு முன்பு, வெறும் 3 மாணவர்கள் பயின்றுவந்ததால் மூடு விழா காணவிருந்த தேனாடு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தற்போது 50 மாணவர்களுடன் சிறப்பான ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 




சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.

அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு!!

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பெற்றோர் தயக்கம்
தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.
இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா ?

பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது


பிளஸ் 2 வரைஇனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள்துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய  அரசு  உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரேவிதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும்இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல்பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது. இந்தபள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்கமுடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும்பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுபுதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கானசாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்தவிவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Friday, April 13, 2018

DA Arrear Software 2018 @ MSKedusoft

MSK FREE EDUSOFT
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

DA Arrear Software 2018 @ MSKedusoft

Click Here to Download
👇👇👇👇

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

 Instruction for Enable Macro

Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


--
Always Be Happy..!
Thank You..

Wednesday, April 4, 2018

👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫 2049 பங்குனி 21 ♝ 04•04•2018

🔥  T  N  P  T  F  🔥
🛡  மேலூர்  🛡


👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫

2049 பங்குனி 21 ♝ 04•04•2018

🔥
🛡அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14 அன்று மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு.

🔥
🛡CBSE 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது -  மத்திய அரசு அறிவிப்பு.

🔥
🛡மூன்றாம் பருவ தேர்வுக்கால அட்டவணை கரூர், சேலம் & திருவண்ணாமலை DEEOs வெளியீடு. பள்ளிக்கல்வி காலண்டர்  அடிப்படையில் 9,11,13,16,18,19 ஆகிய தேதிகளில்  தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு.

🔥
🛡பள்ளி திறந்ததும், மூன்று வகையான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், ஒன்று, ஆறு,ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் நாளே, அந்த புத்தகங்கள் வழங்கப்படும் - பள்ளிக் கல்வி அமைச்சர் பேச்சு

🔥
🛡தஞ்சாவூர் மாவட்டம் ஊரகப் பகுதியில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் அனைவரையும் இணைத்து ஒரே வித சீருடையோடு மகளிர் தினவிழா கொண்டாடி அசத்தினார் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ரமாபிரபா.

🔥
🛡
தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவளித்த ஆசிரியருக்கு ஊதிய பலன்கள் கட் - நீலகிரி CEO அதிரடி உத்தரவு.

🔥
🛡பணிமாறுதலில் Spouse முன்னுரிமை பயன்பாட்டில் சில மாற்றம் வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு - பரிசீலனை செய்ய இயக்குனருக்கு அரசு பரிந்துரை

🔥
🛡அரசுப்பள்ளி மாணவர் நிலை மோசம் - அரசும் ஆசிரியரும் பாடுபடும் போது  பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை - தி ஹிந்து கட்டுரை விவரிப்பு.

🔥
🛡ஃபேஸ்புக்கைத் தொடர்ந்து Whatsapp தகவல்களும். சாட்டிங் விவரங்களும்
திருடப்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட செயலி மூலம், தங்களின் நண்பர்களின் வாட்சப் உரையாடல்கள் உட்பட Offline, Online Status ஆகியவற்றையும், அவர்கள் எப்போது தூங்கச் செல்கிறார், எப்போது விழிக்கிறார் உட்பட அனைத்து விஷயங்களையும் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

🔥
🛡 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மே 19மற்றும் 20ஆம் தேதி TANCET நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. ஆன்லைனில்  ஏப்ரல் 23ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைப்www.annauniv.edu/tancet2018 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

🔥
🛡காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5-ம் தமிழகம் முழுவதும் பஸ் ஸ்டிரைக் -  தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

🔥
🛡அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்கள் நடித்து, ஆசிரியர்கள் இயக்கிய "வெளிச்சம்" குறும்படம் வெளியீடு

Saturday, March 31, 2018

ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன?: தனி நபர் அறிந்துகொள்ள UIDAI இணையதளத்தில் வசதி

Image result for AADHAAR
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைஅறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலதிட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக ஆதார் கொண்டுவரப்பட்டது.

இளைஞர்களின் வித்தியாச அழைப்பு! ஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. "ஏப்ரல் கூல்" போதுமே.....

முட்டாள்கள் தினம்...!

ஏப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்... இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை...
          முட்டாள்கள்தினம் ஐரோப்பிய நாடுகளில் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு வரலாற்று காரணங்களும், நகைச்சுவை காரணங்களும் பல கூறப்படுகின்றன. உறுதியான காரணம் இதுவரை சரியாக தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அதனால் நமக்கேதும் நிகந்துவிடபோவது இல்லை.

Friday, March 30, 2018

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை கோரி வழக்கு

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக வேலூரைச் சேர்ந்த அசோக்குமார் உள்ளி்ட்ட 4 பேர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாசிலாமணி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனுக்களை அவர்கள் பெறுவதில்லை. மீறிப் பெற்றாலும் அற்ப காரணங்களைக் கூறி அவற்றை நிராகரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடந்தால் அது முறையாக நடக்காது. எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறுஅதில் கோரியுள்ளனர்.

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

சென்னை 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

கடந்த, 2015-2016 மற்றும், 2016-2017ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை, நாளைக்குள் தாக்கல் செய்வதற்கான பணிகளை, வருமான வரி செலுத்துவோர், துரித கதியில் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு, உதவி செய்வதற்காக, துறை சார்ந்த, 30பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இணையதளம் வழியாக தாக்கல் செய்ய முடியாதவர்களுக்கு, வருமான வரிக் கணக்கை தயார் செய்து கொடுக்க, தனியார் நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சிறப்பு கவுன்டர்கள், 22ம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகின்றன.

RMSA SSA TEACHER EDUCATION (DIET) மூன்றையும் ஒருங்கினைத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்?

Thursday, March 29, 2018

ஆசிரியர் வாஞ்சிநாதனை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேலூர் TNPTF சார்பாக பங்கேற்பு

வட்டார வள மேற்பார்வையாளர்கள் பணி விடுவிப்பு- SSA செயல்பாடுகள் முடங்கும் அபாயம்


RTE - 2018-19 ம் கல்வி ஆண்டில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கை அறிவிப்பு!!!



பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக "கைசாலா குழு" - வில் இணைய அழைப்பு

Friends Our Principal secretary advised to use kaizala chatting app which has advanced facilities and limitless members. Interested teachers click the below link and join
You are invited to Microsoft Kaizala group: Palli.in. Click https://join.kaiza.la/p/_AsUOESUQuiS4bMqOKj4Aw
to download the app and get connected with teachers around the state ,nation, and globe

நம் பள்ளிக் கல்வி செயலர் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக கைசாலா குழுவில் எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் இணையலாம்
நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து செயலி தரவிறக்கம் செய்து இணையலாம்.
You are invited to Microsoft Kaizala group: Palli.in. Click https://join.kaiza.la/p/_AsUOESUQuiS4bMqOKj4Aw

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் TNPTF செய்தி


Tuesday, March 27, 2018

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமேலூர் வட்டாரம் (கிளை

Google Forms
Having trouble viewing or submitting this form?
Fill out in Google Forms
Membership 2018
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மேலூர் வட்டாரம் (கிளை
உறுப்பினர் சேர்க்கை 2017-2018
Create your own Google Form

CPS NEWS - இன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது!


டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போராட்டம்-ஆசிரியர்கள் முற்றுகை





டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

1,6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு -

1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்றை அச்சிடும்  பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.








தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாடத்திட்டம் மாற்றிஅமைக்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய  பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். 

Monday, March 26, 2018

மேலூர் TNPTF செயற்குழு

Google Forms
Having trouble viewing or submitting this form?
Fill out in Google Forms
I've invited you to fill out a form:
மேலூர் TNPTF செயற்குழு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மேலூர் வட்டாரக் கிளையின் செயற்குழு உறுப்பினர்கள் விபரப் பட்டியல்
Create your own Google Form

Friday, March 23, 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்: மசோதா நிறைவேறியது

பணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அங்கு இந்த மசோதா கடந்த 15–ந் தேதி நிறைவேறியது.இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை மாநிலங்களவையில் நேற்றுமத்திய தொழிலாளர்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார்தாக்கல் செய்தார். இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற வேண்டும் என ஏராளமான உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேட்டுக்கொண்டனர். அதன்படி உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறி இருப்பதன் மூலம், தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்கிறது. மேலும் பெண் தொழிலாளர்களின் பிரசவ விடுப்பை, பணி நாட்களாக கருதுவதற்கான அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குவது குறிப்பிடத்தக்கது.