Wednesday, February 28, 2018
Tuesday, February 27, 2018
பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.
பள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | CEOக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள். கல்வி துறையில் வரும் ஜூன் 2018 முதல் DE0, DEEO பதவி மாற்றப்பட்டு நான்கு ஒன்றியத்திற்கு ஒரு DE0 மாவட்டத்திற்கு ஒரு CE0. AEEO பதவிகள் மாற்றம் இல்லை. SSA , RMSA மூடப்படுகிறது . DIET + DE0 அலுவலகம் இணைக்கப்படுகிறது. 1 முதல் 12 வகுப்பு வரை மாவட்டத்தின் அனைத்து அதிகாரமும் CEO கையில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் பணி நியமனம் வரை செய்யும் அதிகாரம் சிஇஓ க்குஅளிக்கப்படும். சிஇஓ க்கள் இடமாறுதல்,17A, 17B மற்றும் சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. JD மற்றும் இயக்குநருக்கு மேல்முறையீட்டு அதிகாரி மற்றும்,பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை சரி செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள் CEOக்களுக்கு அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு ரூ.25ஆயிரம் அபராதம் - வழக்கு தொடுத்த மாணவியிடமே வழங்க உத்தரவு
பொறியியல் பட்டதாரி மாணவிக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அத்தொகையை சம்பந்தப்பட்ட மாணவியிடமே வழங்க உத்தரவிட் டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவி ஆர்.முத்தழகி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 2011-ல் பொறியியல் படிப்புக்காக ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கேட்டு போளூர் தாலுகா கேளூரில்உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பித்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் கடன் வழங்கவில்லை. எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மாணவியின் கோரிக்கையை பரிசீலித்துகல்விக்கடன் வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012-ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து வங்கி மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அத்தொகையை சம்பந்தப்பட்ட மாணவியிடமே வழங்க உத்தரவிட் டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவி ஆர்.முத்தழகி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 2011-ல் பொறியியல் படிப்புக்காக ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கேட்டு போளூர் தாலுகா கேளூரில்உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பித்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் கடன் வழங்கவில்லை. எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மாணவியின் கோரிக்கையை பரிசீலித்துகல்விக்கடன் வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012-ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து வங்கி மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
NHIS திட்டத்தை ஆசிரியர்களுக்கு பெற்றுத் தருவதில் TNPTFன் சாதனை
👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர் திருமதி.ரேய்ச்சல் சிந்தியா அவர்களின் இதய நோய்க்காக ரூ.10,1000/- மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பிரச்சனை மாநில மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில் ரூ.1,86,000/- பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
-🌹🌹🌹🌹🌹🌹🌹
Monday, February 26, 2018
ஜாக்டோ - ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், முடிவுக்கு வந்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்., 21 முதல், தொடர் மறியல்போராட்டம் நடந்தது.
சென்னையில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன், தினமும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மறியல் நடத்தினர்.
அவர்களை போலீசார், காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்து வந்தனர்.நேற்று முன்தினம், பிரதமர் மோடி, சென்னையில் பங்கேற்ற அரசு விழா நடந்த இடம் அருகே, நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, முதல்வருடன் பேச்சு நடத்தஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று முன்தினத்துடன் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுமுடிந்தபின், கோடை விடுமுறையில், மே, 8ல், கோட்டையை நோக்கி பேரணி செல்ல, ஜாக்டோ - ஜியோ முடிவு செய்துள்ளது. இதற்காக, மார்ச், 24ல் மாவட்ட வாரியாக, ஆயத்த பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
தகவல்
மேலூர் வட்டாரம் (கிளை)
Sunday, February 25, 2018
Saturday, February 24, 2018
Friday, February 23, 2018
Wednesday, February 21, 2018
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார். நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார். நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார். ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
வெற்றி TNPTFன் வெற்றி
👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் திருமதி. செல்வி ஆசிரியையின் கணவர் ஆண்டோ அவர்களின் தொடர் சிகிச்சைக்காக ரூ.17000/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
-🌹🌹🌹🌹🌹🌹🌹
TNPTFன் NHIS சாதனை வெற்றி
👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
விருது நகர் மாவட்டம் நரிக்குடி வட்டாரச் செயலாளர் திரு.ஜெகநாதன் அவர்களின் மகன் கோகுலின் தொடர் சிகிச்சைக்காக ரூ.5900/- பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
-🌹🌹🌹🌹🌹🌹🌹
Tuesday, February 20, 2018
தொடக்க கல்வியில் காலியாகும் 2,533 ஆசிரியர் பணியிடம்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் 2,533 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் 3,170 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதேசமயம் சில பள்ளி களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 541 காலியாக உள்ளன.
உபரியாக உள்ள 1,992 ஆசிரியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இதனால் காலிப்பணியிடம் 1,178 ஆக குறையும். சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் 2,018 பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. அதன்பின் உபரியாக கண்டறியப்பட்ட 2,533 பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்டத் தேர்தல் - செய்தி துளிகள்
![]() |
TNPTF-VIRUDHUNAGAR-DT ELECTION |
🌟 பேரன்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்டத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,
மார்ச்சுக்குள் புதிய பாட புத்தகம்
''புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடியும்; அடுத்த மாத இறுதிக்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில், 318 பள்ளிகளுக்கு, இணையதளம் வழியே, 'வை - பை' வசதியை, தனியார் நிறுவனம், இலவசமாக செய்து கொடுத்துள்ளது. பூமிக்கு கீழே கேபிள் பதிக்கப்பட்டு, இவ்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இது, கல்வித் துறையில் ஏற்படும் மாற்றங்களை, மாணவர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முடிந்து விடும்; அந்த மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் முதல் வாரத்திற்குள், புதிய பாடப்புத்தகம் உருவாக்கப்படும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கும் மேலான, பாடத்திட்டம் உருவாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Monday, February 19, 2018
Sunday, February 18, 2018
10 changes in income tax laws proposed in Budget 2018
1) Rs. 40,000 standard deduction introduced:
This additional deduction has been proposed in place of existing deductions of Rs. 19,200 for transport allowance and Rs. 15,000 for medical reimbursement. This will benefit 2.5 crore salaried employees. Pensioners, who normally do not enjoy any allowance for transport and medical expenses, will also benefit from it. After the introduction of standard deduction, the salaried class will enjoy a flat deduction of Rs. 40,000 from their taxable income. Standard deduction was earlier available for salaried individuals previously, till it was abolished with effect from assessment year 2006-07. The benefits arising from standard deduction depends on the tax bracket a salaried individual falls in.
3) Introduction of long-term capital gains tax on equity investments: A new 10 per cent tax (cess extra) will be applicable on capital gains exceeding Rs. 1,00,000 upon sale of equity share or units of equity oriented funds. However, for the benefit of tax payers, the gains till January 31, 2018, are being grandfathered. This means that only gains over January 31, 2018, prices will be taxed.
ரிட் மனு என்றால் என்ன ?
ரிட் மனு என்றால் என்ன ? எந்த வகையான பிரச்சனைகளுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம் ?
அரசாங்கம், மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசு தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம்.
ரிட் மனு என்றால் என்ன ?
‘WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்!
Saturday, February 17, 2018
Friday, February 16, 2018
How to pay Income Tax via Online
Tax Payment அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் online மூலம் தங்களது account இல் இருந்து எப்படி செலுத்துவது என்பதை பார்ப்போம் ....online tax payment Tips..
1.CLICK HERE ONLINE TAX E - PAYMENT ....
கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி
வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும்பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
Tuesday, February 13, 2018
INCOME TAX FORM 2018 - ALL DETAILS & INCOME TAX CALCULATORS
- INCOME TAX FORM 2017 - 2018 (NEW)
- INCOME TAX -12BB FORM
- INCOME TAX -12BB FORM (Tamil)
- 2017 - 2018 நிதியாண்டு வருமான வரி முக்கிய தகவல்கள்!!!
- Click Here - Income Tax Slab for Individual Tax Payers
- INCOME TAX EXEMPTIONS LIST FOR 2017 -18
- Income tax - INSTRUCTIONS For Monthly Salaried Workers
- CPS பிடித்தம் உள்ளவர்களுக்கு...!
- வருமானவரி சில குறிப்புகள்
பள்ளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான விபத்து காப்பீடு அரசாணை தமிழக அரசு வெளியீடு
இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Sunday, February 11, 2018
அரசுப்பள்ளி பள்ளி ஆசிரியர்களை பெருமை படுத்திய பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன், IAS அவர்கள் - விகடன் விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஏளனமாக சித்தரிக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் ஆசிரியர்களை பெருமைப்படுத்திய "பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன் IAS" அவர்களுக்கு "தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மேலூர் வட்டாரக் கிளையின் " சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Saturday, February 10, 2018
Thursday, February 8, 2018
Wednesday, February 7, 2018
Tuesday, February 6, 2018
காத்திருப்புப் போராட்டம் - சுவரொட்டி பிரச்சாரம்
மேலூர் வட்டாரச் செயலாளர் திரு.ரெ.சிவகுமார் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலந் தழுவிய காத்திருப்புப் போராட்ட சுவரொட்டி பிரச்சாரம் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
உடன்
க.ராஜமாணிக்கம் - துணைச் செயலாளர்
ச.சுப்பிரமணியன் - துணைச் செயலாளர்
கி.மாரிமுத்து - செயற்குழு உறுப்பினர்
இவண்
மேலூர் வடடாரம் (கிளை)
CPS : பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா?: டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை
தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதிய கணக்கில் (சிபிஎப்) செலுத்தப்படும். இதே அளவு தொகையை அரசு தனது பங்காக சிபிஎப் கணக்கில் செலுத்தும். தற்போது சிபிஎப் தொகைக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
Monday, February 5, 2018
TNPTF - க்கு அடுத்த வெற்றி

👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. இந்திரா காந்தி அவர்கள் கண் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான மொத்த தொகை் ரூ.19,700/-யையும் பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
சாதனை - TNPTF - க்கு அடுத்த வெற்றி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரம் தேவனாங்குறிச்சி ஊ.ஒ. ஆரம்பப் பள்ளி சத்துணவு அமைப்பாளர் திருமதி. ஜெயா என்பாரின் மகன் கவின்குமார் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கான மொத்த தொகையும் ரூ.1,17,135/- பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை
அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.
பெரும்பாலான மையங்களில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையே உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு அம்மை, கொப்புளங்கள் போன்ற வெப்ப நோய் தாக்குகின்றன. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்!
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போதுஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது.
தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளி மாணவி!
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பொது அறிவு திருவிழாவில் தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளிமாணவி தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுகளை அளித்துள்ளது.

IT Software 2017-2018 @ MSKedusoft Version 8.0
MSK FREE EDUSOFT
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?id=1eFccAt7yJNtY4QHMknYW-c6ll8GmZ4ZA
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
--
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
--
Always Be Happy..!
Thank You..
Sunday, February 4, 2018
TNPTFன் சமரசமற்ற போர்க்குணத்திற்கு கிடைத்த வெற்றி மகுடம்
👍👍👍 வெற்றி👍👍👍
👍👍👍 சாதனை👍👍👍
NHIS திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை ஏமாற்றி வந்த மிகவும் பெயர்பெற்ற மதுரை மருத்துவமனைக்கு 3.5 கோடி ரூபாய் நிறுத்தம். புகார்களை தீர்வு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் தடையில்லா சான்று பெற்று வர ஆணை. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எடுத்த முயற்சிக்கு அடுத்த வெற்றி.
NHIS திட்டத்தில் ஏற்படும் அநீதிகளை வெளிக்கொணர்வோம். ஆசிரியர்கள் நலன் காப்போம்.
_ TNPTF மாநில மையம்
TNPTF ன் சாதனை வெற்றி
👍👍👍 வெற்றி👍👍👍
👍👍👍 சாதனை 👍👍👍
அன்பார்ந்த ஆசிரியர் பேரினமே''
NHIS - மூலம் கட்டணமில்லா சிகிச்சையை கார்ப்ரேட் மருத்துவமனைகள் காசாக்கி ஆசிரியர் - அரசு ஊழியர்களின் உயிரினை பணயமாக வைத்து மிரட்டி முன் பணம் என்ற பெயரில் வசூல் செய்வதை ஆதாரத்துடன் நிரூபித்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை இன்று UNITED INDIA இன்சூரன்ஸ் நிறுவனத்தால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருகின்றது.
இதற்கு முன் மதுரை வடமலையான் மருத்துவ மனையும் மூன்று மாதங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது TNPTF மாநில மையத்தின் மகத்தான சாதனை.
தவறு எந்த இடத்தில் நடந்தாலும் துணிவோடு தட்டிக் கேட்பது TNPTF மட்டுமே.
- TNPTF மாநில மையம்
ரூ.40,000 நிலையான கழிவு கொடுப்பதை போல கொடுத்து வேறு வழியில்பறித்த அரசு.. மாத சம்பளதாரர்கள் ஷாக்!
மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு சிறு சலுகையும் கானல் நீராக மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது. ஆம். நிரந்தர கழிவு என்ற பெயரில் ரூ.40,000 அறிவித்துவிட்டு, நைசாக மெடிக்கல் செலவு மற்றும் பயணப்படி (conveyance) ஆகியவற்றை நீக்கிவிட்டது மத்திய அரசு.
இதனால் மிக, மிக சொற்பமான தொகை மட்டுமே மாத சம்பளம் வாங்கும் பிரிவினருக்கு எஞ்சப்போகிறது. சலுகை கொடுப்பதை போல கொடுத்துவிட்டு, ஏற்கனவே இருந்த சலுகையை பறித்துவிட்டது மத்திய அரசு.2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் மத்தியநிதி அமைச்சர் அருண் ஜேட்லி.அப்போது வருமான வரி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆனால் நிலையான கழிவு (standard deduction) என்ற பெயரில் ரூ.40,000 அறிவிக்கப்பட்டது.2006-07ம் நிதியாண்டுக்கு முன்புவரை நிலையான கழிவு என்பது நடைமுறையில் இருந்த ஒன்றுதான். அதிகபட்சமாக அப்போது ரூ.30,000 வரை நிலையான கழிவு அனுமதிக்கப்பட்டது. எனவே இதே நடைமுறை மீண்டும் வந்துள்ளதாகவே மக்கள் கருதி மகிழ்ச்சியடைந்தனர். மாத சம்பளதாரர்களுக்கு கிடைத்த ஒரே நல்ல அறிவிப்பு இதுதான் என நினைத்தனர். ஆனால், அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டனர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.நிலையான கழிவாக ரூ.40,000 அளிப்பதாகவும், அதற்குமெடிக்கல் பில் மற்றும் பயணப்படி சான்றுகளை கொடுக்க வேண்டும் என்று மட்டுமே ஜேட்லி கூறியிருந்தார். ஆனால் ஏற்கனவே இருந்த அவ்விரு சலுகைகளும் பறிக்கப்பட்டுவிட்டது இப்போது தெரியவந்துள்ளது.
கல்வி செஸ் வரி 4 சதவீதமாக உயர்வு
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக வருமான வரி செலுத்துவோரிடம் 3 சதவீத செஸ் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த செஸ் வரி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த புதிய செஸ் வரிக்கு ‘சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரி’ என பெயரிடப்பட்டுள்ளது.இதன் மூலம் வரி வருவாயில் 11,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், செஸ் வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இது வருமான வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும்.
பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசுநிதியுதவி அளிக்கிறது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட செய்தித் துளிகள்
ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் இன்று (03.02.2018) சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை அலுவலக கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

Subscribe to:
Posts (Atom)