Thursday, February 1, 2018

மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 01.02.2018 இன்று பிற்பகல் நடைபெற்றது.






மேலூர் வட்டாரக் கிளை செயற்குழு


நாள்- 01.02.2018 வியாழன் பிற்பகல் 4.30 மணி
இடம்-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலூர்

தலைமை-திருமதி.ப.சாலம்மாள், தலைவர்
முன்னிலை-திருமதி.பா.சத்தியபாமா, மா.பொ.உறுப்பினர்
வரவேற்புரை-திரு.ரெ.சிவகுமார், செயலாளர்

கூட்டப்பொருள்:
1. வரவு செலவு. 
2. தேரதல் வரவு செலவு. 
3. உறுப்பினர் சேர்க்கை
4. வருமான வரிப் படிவம் பயிற்சி வகுப்பு  
5. ஆசிரியர்கள் பிரச்சனை
6. இயக்க நடவடிக்கைகள் 
7. செயலாளர் கொணரும் பிற

தீர்மானங்கள்:
1) ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு , குறிப்பாக அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்ட பெண்களுக்கும் இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது
2) 24.01.2018 அன்று நடைபெற்ற வட்டாரத் தேர்தல் மிகச் சிறந்த முறையில் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
3) வட்டாரத் தேர்தலுக்கான செலவின வரவு செலவு அறிக்கையை இச்செயற்குழு ஏற்பளிக்கிறது.
4) வருமானவரிப் படிவம் தயார் செய்தல் சார்ந்து பயிற்சி வகுப்பினை 03.02.2018 அன்று பிற்பகல் 1.00 மணி முதல் 5.00 மணி வரை நடத்துவதென முடிவு செய்து இச்செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
5) வட்டாரத் தணிக்கை அறிக்கையின்படி ₹.14,000/- கடன் வரவில் இருப்பதால் வருங்காலங்களில் கையிருப்பாக வங்கிக் கணக்கு தொடங்கி வைப்பதற்கும், கடனை நேர்செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் வட்டாரப் பொறுப்பாளர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டுமாய் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
6) 2017-2018 ஆம் ஆண்டு உறுப்பினர் சேர்க்கையினை 15.02.2018 க்குள் முடிப்பதெனவும், பொறுப்பாளர்கள் துணைப் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் உறுபப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்து கொள்வதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.
7) ஆசிரியர்கள் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களை நேரிடையாக சந்திக்கவும், கடிதங்கள் அளிக்கவும் வட்டாரச் செயலாளருக்கு அனுமதியளித்து இச்செயற்குழு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
8) வட்டார அளவில் தீர்க்க இயலாத பிரச்சனைகளை மாவட்டக்கிளையின் வழியாகவும், மாநில அமைப்பின் வழியாகவும் உடனடியாக மேற்கொண்டு முடிவுக்குக் கொண்டுவர தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மூவரும் இணைந்து அணுகிட இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

நன்றியுரை-திருமதி.வெ.ராணி, பொருளாளர்

               இப்படிக்கு
         (ரெ.சிவகுமார்)

No comments: