மதுரை மாவட்டம், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக இன்று (08.01.2018) மாலை 5:30 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது

தோழர்களே..
நமது புதிய பென்சன் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் எங்கே முதலீடு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு சில சங்கங்கள் உட்பட யாரிடமும் பதில் இல்லை.
சரி.இப்போ என்ன என கேள்வி வருகிறதா..
அதற்கு பதில் தான் இதோ போக்குவரத்து ஊழியர், போாராட்டம்...
ஆம் அவர்கள் ஊதியத்தில் பிடித்த எந்த பணத்தையும்
அந்தந்த தலைப்புகளில் வரவு வைக்காது செலவு செய்யப்பட்டது.
அதனால் என்ன.???
வீடு கட்ட பிடித்த பணம் வங்கியில் கட்டல வீடு ஏலம் போகுது..
ஓயவூதியம் கணக்கில் வரவு வைக்கப்படல.
பிஎப் அந்த கணக்கில் வரவு வைக்கல ஓய்வு பெற்றபின் பிஎப் பணத்தைக்கேட்டா
காணலைங்கரானுங்க
என்ன செய்ய...
இப்ப போராட்டம்
நடக்குது நாமும் ஆதரவு ஆர்ப்பாட்டம்
எதுக்கு நடத்துறோம்.
எங்க பணம் எங்கேனு கேட்டு நாம மீண்டும் வீதிக்கு வராம பென்சன் வராது.
எனவே தோழர்களே இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாரீர் வாரீர் இன்று (08.01.2018) மாலை 5.30மணிக்கு...
முனைவர்
சு.கிருஷ்ணன்
மாவட்டச்செயலாளர்
அரசு ஊழியர் சங்கம்,
மதுரை
No comments:
Post a Comment