
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்ட அழைப்பு.*
🌟 03.02.2017 ல் நடைபெற்ற தொடக்கக்கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டத் தினத்தன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி உரிய ஆணைகள் வெளியிடக் கோரி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம்.
🌟 நாள்: 09.02.2018 காலை 10.00 மணி முதல்.
🌟 இடம்: தொடக்கக்கல்வி இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள்.
*கோரிக்கைகள்:*
🌟 இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு,
🌟 CPS ரத்து,
🌟 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.எட் ஊக்க ஊதியம் மீட்பு,
🌟 8 வது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் பெற்றுவரும் தனி ஊதியத்திற்கு அனைத்துப் பணப்பலன்களையும் அனுமதித்தல் மற்றும் சிறப்புப்படிகளை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட,
15 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும்வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு அறிவிக்கை விடுத்துள்ளது.
*ஆசிரியர் பேரினமே!*
*அணி திரள்வீர்!!*
*🤝தோழமையுடன்;*
*தோழர். மோசஸ்,*
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*தோழர்.பாலசந்தர்,*
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*தோழர்.ஜீவானந்தம்,*மாநிலப் பொருளாளர்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
No comments:
Post a Comment