Saturday, January 6, 2018

Transport strike

தோழர்களே.....
பெரியோர்களே...
தாய்மார்களே....
நண்பர்களே......
சகோதரர்களே...
சகோதரிகளே....
உறவினர்களே.. பொதுமக்களே...!
சிந்திக்க வேண்டுகிறோம்!

போக்குவரத்து தொழிலாளர்களின்
"வேலைநிறுத்தம்" ஏன்?


அரசு ஊழியர்களுக்கு
2.57 காரணி ஊதியம்,
மின்வாரிய ஊழியர்களுக்கும்
2.57 காரணி ஊதியம்
ஆனால்... ஆனால்....
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு
2.44 காரணி ஊதியம் வழங்குவது நியாயமா?

இரவென்றும்...
பகலென்றும் பாராமல்
இடியென்றும்....
மின்னலென்றும் பாராமல்
மழையென்றும்....
வெயிலென்றும்.....
பயலென்றும் பாராமல்

பண்டிகை காலங்களில்
நீங்களெல்லாம்
சந்தோஷமாக. .
மகிழ்ச்சியாக.....
நிம்மதியாக.....
பூரிப்போடும்....
களிப்போடும் கொண்டாடிட.....
எங்கள் குடும்பத்தை,
குழந்தைகளை,
பெற்றோர்களை தவிக்க விட்டுவிட்டு
பொதுமக்களின் சந்தோஷமே எங்கள் சந்தோஷம் என சேவை செய்த எங்களுக்கு நியாயமான ஊதியம் கேட்டு இந்த "வேலைநிறுத்தம்"
ஆதரவு தாருங்கள்.

*MLA க்களின் மாத சம்பள விபரம்...

*கர்நாடகா*  Rs.60,000
*சீக்கிம்* Rs.52,000
*குஜராத்* Rs.47,000
*கேரளா* Rs.42,000
*இராஜஸ்தான்* Rs.40,000
*உத்தரகாண்ட்* Rs.35,000
*ஒடிசா* Rs.30,000
*மேகலாயா*  Rs.28,000
*அருணாச்சல பிரதேசம்* Rs.25,000
*அசாம்* Rs.20,000
*மணிப்பூர்* Rs.18,500
*நாகலாந்து* Rs.18,000
*திரிபூரா*  Rs.17,500

*"தெர்மாக்கோல்" போன்ற திட்டத்தை மக்களுக்கு தந்து தந்து
அழியா புகழ் பெற்ற தமிழ்நாட்டு  MLA-க்கு மாதசம்பளம்...
Rs.1,05,000/= அவ்வளவுதான்!!!
MLA-க்கு இணையான
சம்பளத்தை போக்குவரத்து தொழிலாளர்கள்
கேட்கவில்லை!!

* கொஞ்சம் காரி துப்பிட்டு வாழ்த்தலாம் வாங்க...

படித்தப்பின் பகிரவும்.
இச்செய்தியை நாடறியச் செய்யவும்.

அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகைகளை போக்குவரத்து தொழிலாளர்கள்
கேட்கவில்லை!...

அரசு ஊழியர்களுக்கு உரிய சம்பளம்......
மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் என்னவோ அதைத் தானே கேட்கிறோம்.

மக்களே...
என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க.....

P.குமாரசாமி,
ஓட்டுனர்(ஓய்வு),
த.நா.அ.போ.கழகம்,
விழுப்புரம்.

No comments: