Saturday, January 27, 2018

TNPTF - ன் உயிர்காக்கும் மகத்தான சாதனை தொடர்கிறது


திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டாரம்   பகவதி புரத்தில் தலைமையாசிரியையாகப் பணிபுரியும் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்காக கோவை  ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை நிர்வாகம் NHIS -லிருந்து 10 சதவீதம் மட்டுமே தரமுடியும்.அதற்குமேல் பத்து பைசா பெறக்கூட சட்டத்தில் இடமில்லை என மறுத்தது.


வட்டாரத்திலிருந்து இப்பிரச்சினையை நமது மாவட்டச் செயலாளர் திரு.பால்ராஜ் அவர்களிடம் கொண்டு சென்றோம்.

மாவட்ட மையம் மாநில மையத்திடம் முறையிட்டு அறுவை சிகிச்சைக்கான ரூபாய் 80,000/ -த்தையும் அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற சிகிச்சைக்காக ரூபாய் 20,000/- த்தையும் பெற்றுத் தந்தது.


 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மற்றும் மாநில மையத்திற்கு் மனப்பூர்வமான நன்றியை செங்கோட்டை வட்டாரம் தெரிவித்துக்கொள்கிறது.

 குறிப்பாக இதற்கு முழுமையாக தலையிட்ட மாநில NHIS ஒருங்கிணைப்பாளர் தோழர்.மயில் துணை ஒருங்கிணைப்பாளர்  விருதுநகர் வட்டாரப் பொருளாளர் திரு.செல்வகணேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி.

இவண் ...

கி. இராஜாராம்

 வட்டார செயலர்,TNPTF

 செங்கோட்டை வட்டாரம்,

திருநெல்வேலி மாவட்டம்.

No comments: