Sunday, January 21, 2018

EMIS ஆல் தூக்கம் தொலைந்து மனநோயாளியாகப் போகும் ஆசிரியர்கள்

 EMIS ஆல் தூக்கம் தொலைந்து மனநோயாளியாகப் போகும் தலைமையாசிரியர்கள்

  EMIS இது யாருடைய வேலை ? 
ஆரம்ப நிலை பள்ளிகளுக்கு கணினி இல்லை இ‌‌ணையதள வசதி கிடையாது.  ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி கிடையாது. ஆனால் இந்த பணியை மாணவர் புகைப் படத்துடன் இனணயத்தில் பதிவுசெய்ய வேண்டும். 

     தமிழகம் முழுவதும்  கோடிக் கணக்கான மாணவர்களை புகைப்படத்துடன் இனையத்தில் பதிவுசெய்ய  எந்த நிதியும் இல்லையாம் !!!
  மந்திரத்தில் மாங்காய் காய்க்க  வேண்டும். இவ்வளவு காலம் காய்த்தது எப்படி ? 
      கல்வி அதிகாரிகளின் கட்டாயத்தில்  தலைமையாசிரியர்கள் தன் சட்டைப்பை காசை   ஒரு மாணவனுக்கு  ரூ. 10 வீதம் Browsing center ல் கொடுத்து இப் பணியை செய்து வந்தனர். இதில் கல்வித்துறைக்கு என்ன இடையூரோ ? புதிதாக Android phone mobile application மூலம் இப்பணியை செய்ய    பல தொழில் நுட்ப இடையூறுகளுடன் கூடிய புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
      இதில் சர்வர் தேவையான அளவு வழங்கப்படவில்லை.  இரவு ஒருமணி வரை சுத்திக்கொண்டு தான் உள்ளது. இரவு 2 to 6 சர்வர் கிடைத்தும் தொழில் நுட்ப குறைவு காரணத்தால் மாணவர் புகைப்படம்  பதிவேற்றம் செய்ய இயலவில்லை.
         எனவே கல்வித்துறையே  மாணவர்கள் விபரங்களை பள்ளிகளில் படிவங்கள் மூலம் பெற்றுக்கொண்டு  இணையத்தில் பதிவுசெய்து கொள்ளட்டுமே! 
       ஆசிரியர்கள் அவர்கள் பணியை சிறப்பாக செய்யட்டுமே! 
     இயக்க பொறுப்பாளர்களே சக ஆசிரிய நண்பர்களே இனி EMIS சம்பந்தமாக இப்பணியை  இந்த தேதிக்கு முன் முடிக்க வேண்டும் என்று பீதியைத் தூண்டும் செய்தியை  ஊடகங்கள் மூலம் தயவுசெய்து பகிர் வேண்டாம்.
   Emis இணையத்தில் பதிவேற்றம் ஆசிரியர்களின் வேலை அல்ல  என்பதை தமிழகமெங்கும் பரப்புங்கள்.
      தொழிலாளர்களிடம்  காணப்படும் ஒற்றுமை ஆசிரியர்களிடமும் மலரட்டும்.  ஆசிரியர்கள் data operator  பணி செய்ய வேண்டாம்.  கற்ப்பித்தல் பணியை வேறுயாரும் நமக்கு செய்வதில்லை. இக்காலம் நம்மிடம் குறைக்காண குழு அமைத்து செயல்படுகிறது. எனவே நம் பணியை மட்டும் நாம் சிறப்பாக செய்வோம்.

No comments: